ராசிபலன் 09-07-2026 வியாழக்கிழமை
ராசிபலன் 09-07-2026 வியாழக்கிழமை
மேஷம்
ஜூலை 09, 2026
வாகன பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 09, 2026
தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் மாற்றமான சூழல் அமையும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் ஏற்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரப் பணிகளில் சில சிக்கலான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : அலைச்சல் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சிக்கலான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 09, 2026
புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. இறை வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 09, 2026
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 09, 2026
ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மகம் : முடிவுகள் கிடைக்கும்.
பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 09, 2026
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
துலாம்
ஜூலை 09, 2026
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : நன்மை ஏற்படும்.
விசாகம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 09, 2026
பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
விசாகம் : தீர்ப்பு கிடைக்கும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 09, 2026
நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செய்தொழிலில் சில நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். வழக்குகளில் சில திருப்பமான சூழல் உண்டாகும். தலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய வகை உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : நுட்பங்களை அறிவீர்கள்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 09, 2026
பொருளாதார சிக்கல்கள் குறையும். சமுக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.
திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு மேம்படும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 09, 2026
பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 09, 2026
தனவரவில் இருந்து வந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : தடைகள் குறையும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------