dark_mode
Image
  • Thursday, 06 August 2026

ராசிபலன் 06-08-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 06-08-2026 வியாழக்கிழமை

 

ராசிபலன் 06-08-2026 வியாழக்கிழமை

மேஷம்
ஆகஸ்ட் 06, 2026

உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவுபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

அஸ்வினி : அனுபவங்கள் ஏற்படும்.
பரணி : பிரச்சனைகள் நீங்கும்.
கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம்

---------------------------------------


ரிஷபம்
ஆகஸ்ட் 06, 2026

உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் கைகூடும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும் அனுகூலமும் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.
ரோகிணி : அனுகூலம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


மிதுனம்
ஆகஸ்ட் 06, 2026

பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.

---------------------------------------


கடகம்
ஆகஸ்ட் 06, 2026

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
பூசம் : ஆதாயம் ஏற்படும்.
ஆயில்யம் : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------


சிம்மம்
ஆகஸ்ட் 06, 2026

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------


கன்னி
ஆகஸ்ட் 06, 2026

பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.
அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும்.
சித்திரை : இழுபறிகள் மறையும்.

---------------------------------------


துலாம்
ஆகஸ்ட் 06, 2026

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுப காரிய எண்ணங்கள் கைகூடிவரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : விட்டுக் கொடுத்து செல்லவும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
ஆகஸ்ட் 06, 2026

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் ஏற்படும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அனுஷம் : ஆதாயகரமான நாள்.
கேட்டை : வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------


தனுசு
ஆகஸ்ட் 06, 2026

குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : கனவுகள் பிறக்கும்.

---------------------------------------


மகரம்
ஆகஸ்ட் 06, 2026

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இழுபரியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : வரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------


கும்பம்
ஆகஸ்ட் 06, 2026

வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அவிட்டம் : மாற்றங்கள் உருவாகும்.
சதயம் : அனுபவம் வெளிப்படும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.

---------------------------------------


மீனம்
ஆகஸ்ட் 06, 2026

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும். முகத்தில் பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------