ரத்த சோகை ஏற்படாமல் தவிர்க்க .,நீங்கள் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்...!!
பலர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளர். ரத்த சோகை என்பது ரத்ததில் உள்ள சிவப்பணுக்கள் குறையும் நிலை ஆகும். ரத்த சோகையால் சோர்வாக உணருவீர்கள். சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், தலைசுற்றல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படும்.
ரத்த சோகை ஏற்பட்டால் சில உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்னென்ன உணவுகள் என இப்போது பார்போம்.
கீரைகள்: கீரைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து இயற்கையாகவே கீரைகளுக்கு அதிகம் உண்டு எனவே உங்கள் உணவில் நீங்கள் கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள்: பழங்கள் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும். நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் மாதுளை அல்லது ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ரத்தசோகைக்கு சிகிச்சை அளிப்பதில் பழங்கள் நல்ல பலனை தருகிறது.
வைட்டமின் சி: வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நம் உடலில் இருப்புசத்து உறிஞ்சிதலை மேம்படுத்தும்.
பாதாம்: தினமும் நமது உணவில் 4 முதல் 5 சேர்த்து கொள்ளும் போது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் பாதாமை சாப்பிட்டு வர நல்ல பலனை அளிக்கும்.
புரோபயோடிக்குகள்: புரோபயோடிக்குகள் வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவும். தயிரை தினமும் இதற்கு உட்கொள்வது நல்லது.