கல்லீரல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சுண்டைகாய் தொக்கு..செய்முறை..!
சுண்டைகாயில் குழம்பு தான் பொதுவாக சமைப்போம் ஆனால் தற்போது சுவையான தொக்கு எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
சுண்டைக்காய் - அரை கப்
தனியா - 2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 1 கப்
தக்காளி - 4 (நறுக்கவும்)
கடலை எண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கல் உப்பு - தேவையான அளவு
புளி கரைசல் - 2 டீஸ்பூன்
வெல்லம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தனியா, தக்காளி ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும். இதனை ஆறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் வெந்தயம், வெல்லம் ஆகியவற்றை கொட்டி நன்றாக கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சுண்டைக்காயை கொட்டி லேசாக வதக்கவும். இவற்றுடன் அரைத்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தொக்கு பததிற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.