dark_mode
Image
  • Monday, 21 April 2025

மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத டீ!

மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத டீ!

எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி டீ குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

பட்டை - 2 இன்ச்

இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)

ப்ளாக் டீ இலைகள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை - 2 துண்டுகள்

புதினா - 5-6 இலைகள்

தேன் - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.

நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும்.

பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ ரெடி!!!

மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத டீ!

comment / reply_from

related_post