சத்து நிறைந்த சுவையான பூசணிக்காய் அல்வா..!
கோடைக்காலங்களில் அதிகம் கிடைக்கக் கூடிய காய்களில் ஒன்று பூசணிக்காய். இந்த பூசணிக்காயை பெரும்பாலும் திருஷ்டிக்காகவும், சில சமயங்களில் சாம்பார் வைக்க மட்டுமே பயன்படுத்துவோம்.
இப்படிக் கண்டும் காணாமலும் தவிர்க்கும் இந்த பூசணிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, காப்பர், பைபர் என ஏராளமான சத்துக்கள் உள்ளது.இப்படி சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறைவதோடு, பல நன்மைகளைப் பெறலாம். இந்த பூசணிக்காயை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்களை விரும்பி சாப்பிடும் சத்தான 'அல்வா' செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.தேவையான பொருட்கள்பூசணிக்காய் - 3கப்(தோல் நீக்கிய சதைப் பகுதி)நெய் - 4டேபிள் ஸ்பூன்முந்திரிப்பருப்பு - 15குங்குமப் பூ- சிறிதளவுவெள்ளை சர்க்கரை - 1.1/4 கப்ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்செய்முறைஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தோல் சீவி வைத்துள்ள பூசணிக்காயை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து முந்திரிப் பருப்பு வறுத்த பாத்திரத்தில் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.அதனுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கிளற வேண்டும். பிறகு இதனுடன் 1.1/4 கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து இரண்டும் ஒன்றாகக் கிளறி வேக வைக்க வேண்டும்.பூசணிக்காய் மற்றும் வெள்ளை சர்க்கரை இரண்டும் சேர்ந்து அல்வா பதத்திற்கு வரும் போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.இறுதியாக வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்.இதைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகளை அடிக்கடி பூசணிக்காய் சாப்பிட வைக்க இந்த அல்வாவைச் செய்து கொடுக்கலாம்.