முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு..! மார்ச் 22 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது.
நீதிபதி மாற்றுப் பணிக்கு சென்றதால் அந்த வழக்கு புதுக்கோட்டை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியிடம் சென்ற நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜயபாஸ்கரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகாமல் அவர்களது வழக்கறிஞர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை வருகின்ற மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description