dark_mode
Image
  • Monday, 12 January 2026

'மாணவர்களின் கல்வியைக் கெடுக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்'- உதயநிதி ஸ்டாலின்

'மாணவர்களின் கல்வியைக் கெடுக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்'- உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களின் கல்வியைக் கெடுக்க எத்தனை சூழ்ச்சிகள் நடந்தாலும் அதனை முறியடிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 382 ஊராட்சிகளுக்கு 633 கலைஞர் விளையாட்டு உபகரணங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 4000 பயனாளிகளுக்கு ரூ.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 7.57 கோடி மதிப்பில் புதிய செயற்கை இழை ஓடுதளம், ரூ. 34.39 கோடி மதிப்பில் புதிய மற்றும் முடிவுற்றப் பணிகளை அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு படிப்பு எதற்கு என ஒரு கும்பல் கூறிக் கொண்டிருந்தது. தற்போது புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளனர். மாணவர்களின் கல்வியைக் கெடுக்க எத்தனை சூழ்ச்சிகள் நடந்தாலும் அதனை முறியடிப்போம்" எனக் கூறினார்.

'மாணவர்களின் கல்வியைக் கெடுக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்'- உதயநிதி ஸ்டாலின்

related_post