dark_mode
Image
  • Friday, 04 July 2025

மருத்துவ படிப்புகளுக்கு 72,943 பேர் விண்ணப்பம்

மருத்துவ படிப்புகளுக்கு 72,943 பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு, 496 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அதேபோல், 1,900 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கான இடங்களில், 126 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு, ஜூன் 6ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிவடைந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 42,000 பேர் உட்பட, 72,943 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்களின் 'நீட்' மதிப்பெண் விபரத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று, அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், ஜூலை இரண்டாம் வாரத்திற்குள், மருத்துவ படிப்புகளுக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' துவங்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

related_post