dark_mode
Image
  • Sunday, 24 August 2025
மன்னிப்பு கேட்ட வடிவேலு..!

மன்னிப்பு கேட்ட வடிவேலு..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் ஆட்சி புரிந்தவர் தான் நடிகர் வடிவேலு. உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும் இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார். ஆனால் பின் இவர் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் நடிகர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவரான விஜயகாந்த் உடன் வடிவேலு கடந்த 8 வருடங்களாக பேசுவது இல்லை.

அதற்கு முக்கிய காரணமே வடிவேலு இணைந்திருந்த கட்சியின் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் குறித்து விமர்சனம் செய்ததால் தான். அதன் பிறகு இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள கூட இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இதனிடையே அண்மையில் வடிவேலு நடிகர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்ததாகவும், மேலும் அவரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

related_post