dark_mode
Image
  • Sunday, 24 August 2025

மன்னர் ஆட்சி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்கணும்: சொல்கிறார் சீமான்

மன்னர் ஆட்சி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்கணும்: சொல்கிறார் சீமான்

சென்னை: ''மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசை தான் பேச வேண்டும். முதலில் நேரு, நேரு மகளை தான் பேச வேண்டும்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜய் அவரது கட்சி, மாநாடு நடத்துகிறார். மக்களுக்கு மத்தியில் நாம் என்ன கோட்பாடுகளை வைத்து நகர போகிறோம் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். விஜய் நடத்தும் 2வது மாநில மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது.

60வது ஆண்டுகளாக நாட்டில் இரண்டு கட்சிகள் தான் இருக்கிறது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, இபிஎஸ் படம் இடம் பெறுமா? விஜயின் பின்னால் திரளும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். எனக்குத் தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தான் நான் போராடுகிறேன்.

காங்கிரசை தான்...!

ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதில் விஜய் உறுதியாக நிற்க வேண்டும். மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசை தான் பேச வேண்டும். முதலில் நேரு, நேரு மகளை தான் பேச வேண்டும். என் பேசவில்லை. ஒரு குடும்பத்தில் பிறந்த காரணத்தால் பதவி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும்.

ஊழல் என தெரிவித்தால் ஊழலுக்காக சிறை சென்ற கட்சி ஒன்று உள்ளது அதை எதிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போது தான் ஒழுங்கு இருக்கும். இது போன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு சீமான் கூறினார்.

related_post