மக்களை சென்றடைய சமூக வலைதளங்களை பயன்படுத்துங்கள்: தேஜ கூட்டணி எம்பிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
புதுடில்லி: பொதுமக்களை சென்றடைய சமூக வலைதளங்களை பயன்படுத்துமாறு தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
பார்லி. கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தினமும் ஒவ்வொரு மாநில தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். அந்த வகையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களை டில்லியில் பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.
இந்த கூட்டத்தில் அவர்களிடம் பேசிய அவர், எம்பிக்கள் திறம்பட பணியாற்ற வேண்டும், மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், அரசின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.