பெண்களுக்கு முழு பாதுகாப்பு – சட்டம் ஒழுங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அவல நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளது. அண்மையில் வேலூர் அருகே ஓடும் இரயிலில் ஒரு கர்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதுமற்றும் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடினை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அசிங்கமான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சிறுமிகள், மாணவிகள், இளம் பெண்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் வாழ்க்கையை இந்தக் குற்றச்செயல்கள் பாதிக்கின்றன. இதன் மூலம் பெண்கள் மீது ஒரு பய உணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
இந்தக் குற்றச்செயல்களுக்கு அடிப்படை காரணம் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் பாதுகாப்புடன் நேரடி தொடர்பு கொண்டது. அரசின் கவனக்குறைவோ, காவல்துறையின் முறையான கண்காணிப்பின்மையோ, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை குறைவோ, இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம். இந்த நிலை தொடர்ந்தால், பெண் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாகிவிடும்.
இந்தச் சூழலில் காவல்துறை அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவரும் கடுமையான தண்டனை பெற வேண்டும். பால் வன்கொடுமைகள் போன்ற செயல்கள் பெண்கள் மீது நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க, தமிழக அரசு இரவு பகல் பாராமல் 24 மணிநேரமும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கை முறையாக பலப்படுத்துவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். காவல்துறையின் நடவடிக்கைகள் வேகமாகவும், தீர்க்கமானதாகவும் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி காவல் பிரிவு அமைத்தல், ரயில்கள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு அதிகரித்தல், பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக, எந்தவித அச்சமும் இல்லாமல் வாழ முடிய வேண்டும். இதற்கு சட்டம் ஒழுங்கை மேலும் உறுதிப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டனை அவசியம் பெற வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
எனவே, தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பு மேற்கொண்டு, பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description