dark_mode
Image
  • Saturday, 02 August 2025

பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விடுமுறை - வெளியான அறிவிப்பு!

பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விடுமுறை - வெளியான அறிவிப்பு!

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவசர வேலைகளை கவனிக்க வேண்டிய கருவூலங்கள் குறிப்பிட்ட ஊழியர்களுடன் இயங்கும். இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளின் போது குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை வழங்கபடுகிறது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் வேறொரு சனிக் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் ஆடித் தபசு!

தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுப்பார். இதுதான் ஆடித்தபசு திருவிழா.

என்னென்ன ஸ்பெஷல்?

இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 12 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் கோமதி அம்மன் விதவிதமான அலங்காரங்களில் வீதி உலா வருவார். பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ராத்திரி மண்டகப் படியிலிருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா வருவார்.

கோமதி அம்மனுக்கு காட்சி அளிக்கும் சிவ பெருமான்

விழாவின் ஒன்பதாவது நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். ஆடித்தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வு 11-ம் திருநாளான ஆகஸ்ட் 7-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும். அன்று தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம், மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும். "இந்த விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் தென்காசி மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி வேலை நாள்!

இந்த விடுமுறைக்கு ஈடு கட்ட ஆகஸ்ட் 23ஆம் தேதி வேலை நாள். "உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்பது குறிப்பிடத்தக்கது.

related_post