dark_mode
Image
  • Friday, 18 April 2025

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக ED கூடுதல் குற்றப்பத்திரிக்கை

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக ED கூடுதல் குற்றப்பத்திரிக்கை
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

 

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கை பிப்ரவரி மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சரா செந்தில் பாலாஜி இருந்தார்.

அப்போது அவர் போக்குவரத்து துறையில் அரசு வேலை ஒதுக்குவதாக கூறி பலரிடம் பல லட்சம் வரை பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுதொடர்பாக செந்தில் பாலாஜி அவரது உறவினர் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த சில மாதங்கள் முன்பு செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக ED கூடுதல் குற்றப்பத்திரிக்கை

comment / reply_from

related_post