பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

பசுவதை செய்வோரை தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட பொதுத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று கட்ட போது தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதும் அன்று இரவே கிட்டத்தட்ட புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் காரசாரமான பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற பீகாரில் நடந்த பரப்புரையில் பேசியபோது 'இது சீதையின் மண் என்றும் இங்கு பசுவதையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் எங்கள் ஆட்சியில் பசுக்களை வதைப்பவர்களை தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என்று தெரிவித்துள்ளார்
பசுவதை மற்றும் பசு கடத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description