
நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக
காங்கிரஸ் எம்.பி,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவை கூடியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினை குறித்து பேசினார்.
அவர் கூறுகையில் ''பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்'' எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை 1 மணி வரை ஒத்தவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணிக்கு கூடியபோதும் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.