நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க பிரதமர் மோடி முடிவு - நிர்மலா சீதாராமன்

வண்ண ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூருக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- "சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் உலா வரலாம். ஆனால், இந்தியாவின் கைவினைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம். அற்புதமான கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகான பொருட்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். இத்தகையவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். ஏனெனில், நமது நாட்டின் மென்திறன் இத்தகைய கைவினைக் கலைஞர்களிடம் இருக்கிறது. நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தை அவர்கள்தான் தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள். அவர்களுக்கு துணைபுரியக் கூடிய விஸ்வகர்மா திட்டம் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்படும். அந்த வகையில் ரகுராஜ்பூருக்கு வந்துள்ளதற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description