
நாடாளுமன்ற நிலைக்குழு கவலை - மக்கள் தொகையில் 1% பேருக்கு மட்டுமே தடுப்பூசி திட்டம் தொடங்கி 2 மாதம் ஆன நிலையில்
தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி 2 மாதம் ஆன நிலையில் இதுவரை நாட்டின் மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு கவலையுடன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை 3.15 கோடி பேர் போட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.