நாகர்கோவில் போக்குவரத்து காவல் - அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R. ஸ்டாலின், I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தணிக்கையின் போது,
பதிவெண் பொருத்தாமை
தலைக்கவசம் அணியாமை
ஓட்டுநர் உரிமம் இல்லாமை
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்
என்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 8 இருசக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மொத்தம் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.90,400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description