dark_mode
Image
  • Sunday, 24 August 2025
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மம்தா பேசுகையில்,

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 50 பெண்கள் வேட்பாளர்கள் அடங்கிய 291 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிடுகிறோம். வடக்கு மேற்குவங்கத்தின் 3 தொகுதிகளில், நாங்கள் எங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

மேலும், நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

related_post