dark_mode
Image
  • Sunday, 11 January 2026

துஷ்பிரயோக அரசியலை விரும்பவில்லை: சொல்கிறார் கெஜ்ரிவால்

துஷ்பிரயோக அரசியலை விரும்பவில்லை: சொல்கிறார் கெஜ்ரிவால்

புதுடில்லி: ''நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்ய மாட்டேன்,'' என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், ஆம் ஆத்மி அரசை விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கெஜ்ரிவால் பேசியதாவது: பிரதமரின் 43 நிமிட பேச்சில் 39 நிமிடங்கள் மட்டும் டில்லி மக்களையும், அவர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட அரசையும் விமர்சித்து உள்ளார். 2015 ல் டில்லி மக்கள் இரண்டு அரசை தேர்வு செய்தனர். மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசையும், டில்லிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரசையும் தேர்ந்தெடுத்தனர். 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஆம் ஆத்மி அரசு செய்த பணிகள் குறித்து கேட்டால், அதற்கு பதிலளிக்க 2 -3 மணிநேரங்கள் போதாது.

நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்யவில்லை. 10 ஆண்டுகளில் அவர்கள் பணியாற்றி இருந்தால், தற்போது அவர்கள் டில்லி மக்களை விமர்சித்து இருக்க மாட்டார்கள். வேலை செய்து இருந்தால் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். வேலை செய்யாதவர்கள் மட்டுமே அடுத்தவர்களை விமர்சித்து தேர்தலை சந்திப்பார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

துஷ்பிரயோக அரசியலை விரும்பவில்லை: சொல்கிறார் கெஜ்ரிவால்

related_post