தீ விபத்தில் 4 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருவள்ளூரில் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜென் தனியார் பெயின்ட் தொழிற்சாலையில், நேற்று மாலை மின்கசிவு காரணமாக பயங்கர வெடிச்சத்தம் எழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க சுகந்தி, பார்த்தசாரதி, புஷ்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தின்போது, நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சீனிவாசன் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.