
திருமுருகன்காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..!
கடந்த சில நாட்களாக டிவிட்டர் பக்கத்தை எதிர்த்து சமூக வலைதளங்களில், போர் நடந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன்காந்தியின் டிவிட்டர் கணக்கும் திடீரென்று முடக்கப்பட்டது. எதற்காக முடக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை.
நவம்பர் 26-ம் தேதி திருமுருகன்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், "மோடி அரசை எதிர்த்த வீரமிக்க உழவர் போராட்டம். உழைப்பவன் ஒன்றானால் கோட்டைகள் சரிந்து மேடாகும். எழுச்சி கொண்ட மக்களை எந்த சர்வாதிகாரமும் தடுத்துவிடாது. உழவர் விரோத சட்டங்களைப் போராட்டங்கள் வழியே வீதிகளில் எதிர்கொள்ளும் பஞ்சாப்-அரியானா விவசாய பாட்டாளிகளுக்குப் புரட்சிகர வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டிருந்தார்.