dark_mode
Image
  • Sunday, 10 August 2025

திருப்பத்தூர் மாணவர் மரணம்: பள்ளிக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாணவர் மரணம்: பள்ளிக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் என்பவர் திருப்பத்தூர் ஆசிரியர் நகர்ப் பகுதியில் உள்ள தோமினிக் சாவியோ என்ற மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை வகுப்பறையில் இல்லாததால் ஆசிரியர்கள் தொலைப்பேசி வாயிலாகப் பெற்றோருக்கு தொடர்புக் கொண்டு தங்களுடைய பிள்ளை வீட்டிற்கு வந்தாரா? எனக் கேட்டு உள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முகிலனின் பெற்றோர் என்னுடைய மகன் உங்கள் பள்ளி விடுதியில் தங்கித் தான் படித்து வருகிறார். அப்படி இருக்கையில் எப்படி வீட்டிற்கு வருவார் என்று கேள்வி எழுப்பினர்.

 

முகிலன் காணாமற்போன வழக்கு

இதனைத் தொடர்ந்து மகனுக்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முகிலனின் பெற்றோர் திருப்பத்தூரில் உள்ள பள்ளிக்குச் சென்றனர். இப்போது ஆசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஏற்பட்டனர். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் முகிலன் காணாமல் போனது தொடர்பாகப் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனிப் படை அமைத்துக் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாகத் தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று தோமினிக் சாவியோ பள்ளியில் உள்ள கிணற்றில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது பூட்டப்பட்டு இருந்த கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


பள்ளி கிணற்றில் மாணவர் சடலம்

இதனையடுத்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர் சடலத்தைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்த போது அது காணாமல்போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது. பின்னர் மாணவன் உடலை பிரதேப்பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் முகிலன் உடம்பில் தீ காயங்கள் இருப்பதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன்னுடைய மகனை அடித்து கொலை செய்யப்பட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் தங்களது மகனுக்கு உரிய விசாரணை நடத்தி மரணத்திற்கு நீதி வேண்டி கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தனர்.

தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் மூடப்பட்டுக் கிடந்த கிணற்றில் மாணவர் எப்படிக் கிடந்தார்? பள்ளி மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தனரா? அல்லது பள்ளி ஆசிரியர் கொடுத்த அழுத்தமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவர் பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

இதனை தொடர்ந்து பிரேதப்பரிசோதனை முடிந்து மாணவனின் உடலைப் பெற்றோர் வாங்க மறுப்பு தெரிவித்து, அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ,பள்ளி மாணவன் முகிலன் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், மாணவன் உடலில் சந்தேகிக்கும் வகையிலான காயங்கள் இல்லை என்றும் , நீரில் மூழ்கியதே மாணவன் இறப்பிற்குக் காரணம் எனப் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து இறந்ததாக காவல்துறையின் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

related_post