தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி தீவிர ஆலோசனை.!

தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக முழுவதும் உள்ள தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மண்டல வாரியாக பிரித்து அவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து மக்களவைத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி தற்போது மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description