திமுக ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம்...காயத்ரி ரகுராம் விளாசல்..!
திமுகவால் வாக்குறுதியளிக்கப்பட்ட எந்த ஒரு அறிக்கையையும் மக்கள் பெறமாட்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் திமுகவிடம் இருந்து அச்சுறுத்தல்கள், கொலைகள், கொள்ளை மற்றும் திருட்டை மட்டுமே பெறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம். அவர் மேலும், திமுக எம்பி ரமேஷ் தலைமறைவாக உள்ளார். திமுக ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்று கூறியிருக்கிறார்.
கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு படுகொலை விவகாரத்தில் திமுக தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்பி ரமேஹுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி வேலைக்குச் சென்ற கோவிந்தராசு வீடு திரும்பாமல் இருந்த நிலையில், அவர் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷின் உதவியாளரிடமிருந்து தகவல் வந்திருக்கிறது .
இதை கேட்ட குடும்பத்தார் பதறி அடித்துக்கொண்டு போய் பார்த்தபோது கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களுடன் இரத்தக் கறைகள் இருந்துள்ளன. இதனால் குடும்பத்தினர்கள் சந்தேகமடைந்து திமுக எம்பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், மேலாளர்கள் அல்லாபிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
கோவிந்தராசு மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி ஜிப்மரில் நடந்த பிரேத பரிசோதனையில் கோவிந்தராசு அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதன் பின்னர் முந்திரி ஆலை தொழிலாளர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, சிசிடிவி காட்சிகளும் கோவிந்தராசு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்பது உறுதி செய்துள்ளனர்.
இதன் பின்னரே சிபிசிஐடி போலீசார் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி. ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து ரமேஷ் தலைமறைவாகி இருக்கிறார் என்று தகவல். இந்த நிலையில்தான், திமுக எம்பி ரமேஷ் தலைமறைவாக உள்ளார். திமுக ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்று கூறியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.