தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில்
மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பிரச்சார பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள முடியும். கிராமப்புற பகுதிகளிலும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கும் குடியிருப்பு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என கூறினார்.
மேலும், விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர்
திட்டம் கிடைக்கும் வகையில் 608 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் கொண்டு
வந்துள்ளார். வண்டி பெட்ரோல் இல்லாமல் ஓடாது அதே போல் தான் ஊட்டச்சத்து இல்லாத குழந்தையும் அறிவு வளர்ச்சியை எட்டாமல் போய்விடுகிறது. சத்துணவு உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றார்.
அத்துடன், கிராமபுறங்களில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வதால் தான கொரோனா பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அதன் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதரத்தை பெருக்கிக்கொள்ள முடியும். மகளிர் பேருந்துகளில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் 700 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சேமிப்பு ஆகிறது என கூறினார்.
மேலும், தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் வேலை செய்யும் வாய்ப்பை முதல்வர் உருவாக்கி உள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் செயலபட்டு வருகிறார் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.