dark_mode
Image
  • Thursday, 12 December 2024

தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் நினைவேந்தல் விழா - பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்

தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் நினைவேந்தல் விழா - பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்

அதங்கோட்டாசான் என்றழைக்கப்பட்ட தமிழ்பெரும்புலவர் அவர்கள் கி.மு-7-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில், வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு, மருவி தற்போது. விளவங்கோடு என்றழைக்கப்படும் பகுதிக்குட்பட்ட குளப்புறம் கிராமத்திற்கு அருகில், தற்போதைய முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து. நமது மண்ணில் தமிழ் வளர்க்க அரும்பணியாற்றியவர். அப்போதைய பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் பணி ஆற்றினார்கள். குறிப்பாக, தமிழ் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தை வளர்த்து, அன்றைய அரசவையில் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்கள். மேலும், அகத்திய முனிவரின் முக்கியமான 12-சீடர்களில் தலைசிறந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில் தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும், டிசம்பர் 12-ம் தேதி தமிழக அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் அதங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்

தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் நினைவேந்தல் விழா - பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description