dark_mode
Image
  • Saturday, 30 August 2025

ஐடி ஊழியர் கடத்தல்-தாக்குதல் வழக்கு: நடிகை லட்சுமி மேனன் கைது செய்ய இடைக்கால தடை

ஐடி ஊழியர் கடத்தல்-தாக்குதல் வழக்கு: நடிகை லட்சுமி மேனன் கைது செய்ய இடைக்கால தடை

எர்ணாகுளம் : ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் மது தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் செப்.,17 வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

கேரளாவில் பிறந்து, மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ‛கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கடைசியாக தமிழில் ‛சப்தம்' படத்தில் நடித்தார்.

கேரளாவின், எர்ணாகுளத்தில் மதுபானம் பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடந்த பிரச்னையில் அவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐடி ஊழியர் அளித்த புகாரில் அவரை கடத்திய கும்பலை சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோர் கைதாகி உள்ளனர். இவர்களுடன் நடிகை லட்சுமி மேனனும் அந்த கும்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டாராம். போலீசார் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

இடைக்கால தடை


இந்த நிலையில் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் மது தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் செப்.,17 வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

லட்சுமி மேனன் தற்போது தமிழில் யோகி பாபு உடன் ‛மலை' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கவுதம் கார்த்திக் உடன் இவர் நடித்த ‛சிப்பாய்' படம் பாதியில் நின்றுபோனது. பிரபுதேவா உடன் நடித்த ‛யங் மங் சங்' படம் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

related_post