dark_mode
Image
  • Saturday, 10 January 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

நேற்று (20.06.2025),

சென்னை தெற்கு (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, வேளச்சேரி மேற்கு பகுதி நிர்வாகி திரு.S.வெங்கடேஷ் அவர்களின் ஏற்பாட்டில்,

வேளச்சேரி 100அடி சாலையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளாக மாற்றுதிறனாளிகளுக்கு மிதிவண்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, ஊக்கத்தொகை, புத்தகப் பைகள், நோட்டுப் புத்தகம், ஒருவருக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டிகள், பிரஷர் குக்கர், பெண்களுக்கு புடவைகள் ஆகியவற்றை வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.V.தாமு அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் திரு.லயோலா மணி (எ) A.மணிகண்டன் மற்றும் சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டக் கழக நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என திரளனோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post