தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் கடந்த சில ஆண்டுகளில் மக்களிடையே பெரிய ஆதரவை பெற்றிருக்கிறது. கழக தலைவர் அதிகாரப்பூர்வமாக இந்த பெயரை அறிவித்து, உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்குதல், வெற்றிக் கொள்கைத் திருவிழா, ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் கழகம் தனது அடையாளத்தை வலுவாக உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளச்செய்து, தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களாக சித்தரித்து விஷமமான கருத்துகளை பரப்ப செய்கிறார்கள். இது திட்டமிட்ட முறையில் நடத்தப்படும் செயலாக இருப்பதோடு, கழகத்தின் உண்மையான கொள்கைகளை மக்கள் மத்தியில் தவறாக காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில், தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் உண்மையான கருத்தாகும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை தவிர, கழக தலைவர் அல்லது தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் எந்தக் கருத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்தோ, நிலைப்பாடோ அல்ல. அதனால், தவறான புரிதலுக்கு ஆளாக வேண்டாம் என பொதுச் செயலாளர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் வாதிடுவதோடு, கட்சி சார்பாக பேசுவதாகத் தோன்றும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான செயல் என பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாக எந்த ஒரு கட்சியையும் குறிவைத்து பேசும்போது அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தித் தொடர்பு நிர்வாகிகள் மட்டுமே அந்தக் கருத்துக்களை வெளியிட முடியும். இதை மீறி, அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் கருத்து தெரிவிப்பது கழகத்தின் பெயரைக் கேள்விக்க
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description