தமிழக மீனவர்கள் 16 பேர் கைது- இலங்கை அடாவடி

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்கள் சென்ற இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றது. கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 8 அன்று இலங்கை கடற்படையால் சிறைப்பிக்கப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்களை விடுவிக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாம்பன் டோக்கன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பங்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் மீண்டும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description