தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று தமிழகத்தில் பணியாற்றி வரும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதாவது தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றி வந்த மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷில்பா பிரபாகரன் சதீஷ் முகல்வர் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வைத்தியநாதன் தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description