dark_mode
Image
  • Friday, 29 November 2024

தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா, 267 பேர் உயிரிழந்தனர்..!

தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா, 267 பேர் உயிரிழந்தனர்..!

தமிழகத்தில் இன்று 14,016 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,53,721. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,25 009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,74,247.

இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 42,98,900 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 13,081 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 203 தனியார் ஆய்வகங்கள் என 272 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,68,663.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,92,05,623.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,77,295.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,53,721.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 14,016.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 935.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 9140.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 13,78,385 பேர். பெண்கள் 9,75,298 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 7,839 பேர். பெண்கள் 6,177 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,895 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 21,74,247 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 267 பேர் உயிரிழந்தனர். 187 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 80 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,547 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 7826 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில்198 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 69 பேர்.

இன்று மாநிலம் முழுவதும்26773 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24675 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 2723 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா, 267 பேர் உயிரிழந்தனர்..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description