தமிழகத்தில் அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும்.! திருமாவளவன் காரசார விமர்சனம்.!

தமிழகத்தில் பாஜவுக்கு பணியும் அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு.
தவறு செய்தால் வால் ஓட்ட நறுக்கப்படும் என திருமாவளவன் அண்மையில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர், அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர். இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
இவை அண்மையில் பேசுகையில், ' தமிழகத்தில் பாஜகவுக்கு பணியும் அரசு இல்லை. அவர்களுக்கு கூடை கும்பிடு போடும் அரசு இங்கு இல்லை. பிற மாநிலங்களை போல தமிழகத்தையும் பார்க்கிறார்கள்.
இங்கு நடப்பது, பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி. பிற மாநிலங்களில் செய்த சேட்டைகளை இங்கே செய்ய முடியாது. அப்ப்டி செய்தால், அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும்.' என காரசாரமாக விமர்சித்தார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description