தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட்.!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் 2 பேர் இணைகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தீப் கிஷன் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் சந்தீப் கிஷன் மாநகரம் படத்தின் மூலமாகவும், ஜான் கோக்கன் சார்பட்டா பரம்பரை, கேஜிஎஃப். 2 படங்களின் மூலமாகவும் நன்கு அறியப்பட்டவர்கள்.
ஜான் கோக்கன் தற்போது ஏ.கே. 61 படத்தில் இடம்பெற்றுள்ளார். முக்கிய நடிகர்கள் இணைந்திருப்பதால் கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description