dark_mode
Image
  • Thursday, 06 March 2025

உனக்கு 17, எனக்கு 33.. பள்ளி மாணவனிடம் தனிமையில் அடிக்கடி அத்துமீறிய ஆசிரியை.. சிக்கியது எப்படி

உனக்கு 17, எனக்கு 33.. பள்ளி மாணவனிடம் தனிமையில் அடிக்கடி அத்துமீறிய ஆசிரியை.. சிக்கியது எப்படி

  வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டானிஸ்லாஸ் நகரில் உயர்நிலைப்பள்ளியில் டல்ஸ் புளோரஸ் என்ற ஆசிரியை வேலை செய்து வந்தார். இவருக்கு அங்கு படிக்கும் 17 வயது மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனிடம் ஆசை வார்த்தை பேசி வலையில் விழ வைத்த ஆசிரியை, அவருடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

 

ஆசிரியர்- மாணவன் இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது.. தாய், தந்தைக்கு நிகரான உறவு.. ஆனால் ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறும் சம்பவங்களை அதிகமாக பார்த்திருப்போம்.. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இது அதிகமாகவே நடக்கிறது. சில நேரங்களில் ஆசிரியைகளும் மாணவர்களும் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இளம் மாணவர்கள் மீது மோகம் கொண்டு அவர்களை தங்கள் வலையில் விழவைத்து உல்லாசமாக இருக்கும் ஆசிரியர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அப்படி இருந்த ஒரு ஆசிரியை தான் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டானிஸ்லாஸ் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட உயர்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்பானிஷ் மொழி ஆசிரியையாக 33 வயதாகும் டல்ஸ் புளோரஸ் பணிபுரிந்து வந்தார். தன்னிடம் படிக்கும் 17 வயது மாணவன் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை காதலிக்க தொடங்கிய ஆசிரியை டல்ஸ் புளோரஸ், தனது வலையில் விழ வைக்க விரும்பியுள்ளார்.

 

இதற்காக டல்ஸ் புளோரஸ், அந்த 17 வயது மாணவனுக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். நாளடைவில் ஆசிரியை விரித்த வலையில் மாணவர் சிக்கினார். ஒரு நாள் வீட்டிற்கு வரவழைத்து அத்துமீறியுள்ளார் ஆசிரியை. பின்னர் இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து உள்ளனர். இந்த தகவல் சக மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் ஒரு கட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் புளோரசுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி வீட்டுக்கு அனுப்பியது.

 

இதனிடையே மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிய வந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனே ஆசிரியை டல்ஸ் புளோரஸ் மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியை டல்ஸ் புளோரசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து புளோரசிடம் கல்வி பயின்ற மற்ற மாணவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post