
டெல்லிவாசிகளின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்கும்: சோனியா காந்தி உருக்கம்
மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் அன்றைய தினம்தான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், சோனியா காந்தி வீடியோ மூலம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இண்டியா கூட்டணி போராடி வருகிறது. அதற்கு நீங்கள் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் டெல்லி மக்கள் அனைவரும் தவறாது தங்களது ஒவ்வொரு வாக்கின் மூலமும் இண்டியா கூட்டணியின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், அரசியல் சாசன கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து போராட இந்த தேர்தல் மிக முக்கிய களமாக மாறியுள்ளது. இதற்கு டெல்லி மக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். டெல்லியின் 7 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய உங்களை (டெல்லிவாசிகளை) கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description