dark_mode
Image
  • Sunday, 11 January 2026

டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே டிரான்ஸ்பர்! மத்திய அரசு பணிக்கு மாற்றம்

டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே டிரான்ஸ்பர்! மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் வந்திதா பாண்டே. கறார் மற்றும் கடும் நடவடிக்கைக்கு பெயர் போனவர். இவரை போன்றே இவரது கணவர் வருண்குமாரும் (இவர் திருச்சி எஸ்.பி.யாக இருந்தவர். அண்மையில் அதே திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணி உயர்த்தப்பட்டார்).கண்டிப்பான அதிகாரி.

இருவரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளால் இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்கள். அதன் காரணமாக நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட, அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்ததால் விவகாரம் பெரிதாக மாறியது.

மதுரை

இந்நிலையில் திண்டுக்கல் சரக டிஐ.ஜி.யாக அண்மையில் தான் வந்திதா பாண்டே மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கிருந்தும் மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு பணிக்கு, மாற்றப்பட்டு உள்ள வந்திதா பாண்டே, இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக பணி அமர்த்தப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இயக்குநராக அவர் அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

related_post