dark_mode
Image
  • Thursday, 06 March 2025

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி கொலை ! ஊழியர் கைது

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி கொலை ! ஊழியர் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவரை கொலை செய்த வழக்கில்,மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக,கடந்த மாதம் 22 ஆம் தேதி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

மேலும்,மருத்துவமனையின் 3 வது மாடியில் ஆக்சிஜன் உதவியுடன் சுமிதா சிகிச்சை பெற்று வந்தார்.இதனையடுத்து,சுமிதாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு,அவரது கணவர் மௌலி மே மாதம் 23 ஆம் தேதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது,சுமிதா மருத்துவமனை படுக்கையில் இல்லை.

 


இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் மௌலி தகவல் கொடுத்தார்.அதன்பின்னர்,மருத்துவமனை ஊழியர்கள் சுமிதாவை தேடித் பார்த்துள்ளனர்.ஆனால் கிடைக்கவில்லை.இதனால்,அதிர்ச்சியுற்ற மௌலி,அருகில் உள்ள பூக்கடை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

 

இதனையடுத்து,பேராசிரியர் மௌலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,தனது மனைவியை தேட முடியாத நிலையில் இருந்துள்ளார்.இதனையடுத்து,சுமிதாவின் உடல் கடந்த ஜூன் 8 ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8 வது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

 

இந்நிலையில்,சிசிடிவி காட்சியின் அடிப்படையில்,நோயாளியை கொலை செய்த வழக்கில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்,செல்போன் மற்றும் பணத்திற்காக சுமிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி கொலை ! ஊழியர் கைது

comment / reply_from

related_post