சி.ப.ஆதித்தனார் நினைவுதினம் இன்று - தினகரன் அஞ்சலி!!

தமிழ் இதழியலில் முன்னோடி சி.பா.ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய மக்கள் நலப்பணிகளை எந்நாளும் நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்துவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ் மொழி மற்றும் தமிழக மக்களின் மீது அளவில்லா பற்று கொண்டவரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டு தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.ப.ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
null
பத்திரிகையாளராக மட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக சமூகப்பணியாற்றி தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் இதழியலில் முன்னோடி சி.பா.ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய மக்கள் நலப்பணிகளை எந்நாளும் நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description