dark_mode
Image
  • Monday, 15 December 2025

சத்தீஸ்கரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சத்தீஸ்கரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
சத்தீஸ்கரின் கவுரேலா-பென்ட்ரா-மார்வாஹி மற்றும் கோர்பா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கோர்பா மேற்கு பகுதியில் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். அதேநேரம் சொத்து சேதம் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

related_post