dark_mode
Image
  • Tuesday, 09 December 2025

எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை நியமித்தது கமிஷன்

எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை நியமித்தது கமிஷன்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க, மத்திய அரசு அதிகாரிகளை பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்து உள்ளது.

 

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

அதிகாரிகள் நியமனம்


திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு, மத்திய கூட்டுறவு அமைச்சக இணை செயலர் ராமன் குமார், எஸ்.ஐ.ஆர்., பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை செயலர் குல்தீப் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால்; புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி...

விருதுநகர், ராமநாத புரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை செயலர் விஜய் நெஹ்ரா ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு


இவர்கள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பர். தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாக செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவர்.

வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த யாரும் விடுபடக்கூடாது; தகுதியற்ற யாரும் சேர்க்கப்படக்கூடாது என்ற அடிப்படை கொள்கை பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

related_post