dark_mode
Image
  • Monday, 15 December 2025

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்ட நிலையில், உலகின் பல நாடுகளின் அதிபர்கள் தற்போது மோடியின் நண்பர்களாக உள்ளனர்.
 
 
இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த கட்டமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அரசு முறை பயணமாக டிசம்பர் 15, 16, 17 ஆகிய நாட்களில் அவர் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார். 
 
முதலாவதாக டிசம்பர் 15ஆம் தேதி ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி, அதன் பின்னர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மற்ற இரு நாடுகளுக்கு செல்வார்.
 
 
இந்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று நாடுகளிலும் பிரதமர் மோடிக்கு தகுந்த வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

related_post