dark_mode
Image
  • Saturday, 24 May 2025
சசிகலா ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்

சசிகலா ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, சென்னையிலேயே இருந்தவர் முதன்முறையாகத் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வருகை தந்தார். குடும்ப நிகழ்வுகளில் மற்றும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த அவர், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் வருகை தந்தார்.

கார் மூலம், ஸ்ரீரங்கம் வருகை தந்த சசிகலாவுக்கு, ரெங்கா-ரெங்கா கோபுரம் அருகே ஆதரவாளர்களும், அமமுக-வினரும் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர், அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கருட மண்டபம் வந்து கருடாழ்வாரைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து, மூலவர் அரங்கநாதரைத் தரிசனம் செய்தார். தாயார், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

சசிகலா வருகையால் கோயில் வளாகத்திலும், ஸ்ரீரங்கத்திலும் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

comment / reply_from

related_post