dark_mode
Image
  • Friday, 07 March 2025

கொள்ளையர்கள் 8 பேர் கைது; 3.51 கோடி ரூபாய் பறிமுதல்; போலீசார் அதிரடி!

கொள்ளையர்கள் 8 பேர் கைது; 3.51 கோடி ரூபாய் பறிமுதல்; போலீசார் அதிரடி!

புவனேஸ்வர்: ஒடிசாவில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.51 கோடி ரூபாய் ரொக்கம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில், காளஹண்டி மாவட்டத்தில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 

இதில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.51 கோடி ரூபாய், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டினர், வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

comment / reply_from

related_post