காவல் துறையினர் பாலமாகத் திகழ வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசுக்கும் மக்களுக்கும் இடையே காவல் துறையினர் பாலமாகத் திகழ வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும்.
வண்டலூர் ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியை முடித்திருக்கின்ற 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் 429 காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். பெண் காவலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சமூகநீதியின் அடையாளம் நிலைப்பெறுவதன் உதாரணமாகப் பார்க்கிறேன்.
காவல் பயிற்சி முடித்து பணிக்குப் போகின்ற ஒவ்வொரு அதிகாரியும் மக்களுடைய நண்பர்களாகத் திகழ்ந்து காவல் துறைக்கும், அரசுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்
இன்றைக்கு பயிற்சி முடித்து களத்தில் இறங்குகின்ற நீங்கள்தான், நாட்டின் பாதுகாப்புக்கும், சமுதாய நன்மைக்குமான பாதுகாவலர்கள்.
காவல்துறையை பொதுமக்களின் நண்பன் என்று குறிப்பிடுகிறோம். அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் பணியாற்றவேண்டும்.
காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையே காவல் துறையினர் பாலமாகத் திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
காவல்பணி என்பது ஒரு வேலை இல்லை, அது சேவை. நேர்மையாக கடமையை செய்வது மூலம், மக்களுடைய நன்மதிப்பை பெறமுடியும்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description