dark_mode
Image
  • Sunday, 23 November 2025

கரூர் துயரம்: 41 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சியளித்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

கரூர் துயரம்: 41 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சியளித்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் பலியான நிலையில் அதுகுறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பலர் கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத்திணறி 25 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எழும்பு உடைந்து உள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் மூச்சுத் திணறலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பலியானதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

related_post