கயத்தாறு அருகே தளவாய்புரம் பாலத்தில் #லாரி மோதி #டிரைவர் பரிதாப பலி*

கயத்தாறு அருகே தளவாய்புரம் பாலத்தின் தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் லாரியின் உரிமையாளர் படுகாய
மடைந்தார். மதுரை செல்லூரைச் சேர்ந்த அழகரின் மகன் கண்ணன் (47). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது லாரியில் மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மகன் மனோஜ் குமார் (23) என்பவர் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.மதுரைக்கு லாரியில் சென்ற இவர்கள் இருவரும் அங்கு பார்சல் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை நேற்று முன்தினம் இரவில் ஏற்றிக்கொண்ட பிறகு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். லாரியை டிரைவரான மனோஜ்குமார் ஓட்டி வந்தார்.நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தளவாய்புரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்தபோது அங்குள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக லாரி பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த டிரைவர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் லாரியில் பயணித்த உரிமையாளரான கண்ணன், இடிபாடுகளில் சிக்கியதோடு படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த கயத்தாறு போலீசார் மற்றும் கழுகுமலை தீயணைப்பு வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவலர்கள் உதவியுடன், இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லாரியின் உரிமையாளரான கண்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் விபத்தில் இறந்த மனோஜ்குமாரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description